கார், மோட்டார்சைக்கிள் மற்றும் ரோபோட் தயாரிப்பு என ஆட்டோமொபைல் துறையின் பல்துறை வித்தகனாக திகழும் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக பறந்தது. ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரிலிருந்து டோக்கியோவிற்கு தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது ஹோண்டாஜெட். மேலும், வெற்றிகரமாக முதல் பயணத்தை பதிவு செய்ததைத்தொடர்ந்து, இந்த விமானத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆர்டர்களும், விசாரணைகளும் வந்து கொண்டிருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. கோடீஸ்வரர்கள் ஆர்வமுடன் இந்த விமானத்தை வாங்க ஆர்வம் காட்டுவதில் அர்த்தமில்லாமலா இருக்கும். எனவே, இந்த விமானத்தின் முக்கிய சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம். செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் க்ளிக் செய்து படிக்கலாம்.
எஞ்சின் இந்த விமானத்தின் எஞ்சின் இறக்கையின் மேல்புறத்தில் உள்ள தாங்கி மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இறக்கையின் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சிறந்த இடவசதி கொண்டதாக உருவாக்கியுள்ளனர். ஹோண்டாஜெட்டில் ஜிடி ஹோண்டா எச்எஃப்120 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா வடிவமைத்துள்ளது. இந்த எஞ்சின் விமானம் மேலே எழும்பும்போது 2050 lb-ft த்ரஸ்ட்டை அளிக்கும்.
அதிர்வுகள் குறைவு இறக்கையின் மேலே உள்ள தாங்கியில் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால், அதிர்வுகளும், கேபினுக்குள் சப்தமும் மிக குறைவாக இருக்கும். இதனால், சொகுசான, இனிமையான பயண அனுபவத்தை வழங்குமாம். இதுவும் கோடீஸ்வரர்களை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
ஏவியோனிக்ஸ் சிஸ்டம் அடுத்த தலைமுறை கார்மின் ஜி3000 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் மூலம் விமானிகளுக்கான கட்டுப்படுத்தும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், டியூவல் டச் ஸ்கிரீன் கன்ட்ரோலர்கள் மற்றும் அதிதுல்லியமாக தகவல்களை காண்பிக்கும் 3 திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஒரு விமானி மூலம் அல்லது இரு விமானிகள் மூலமாகவும் இயக்க முடியும்.
இடவசதி இதே வகை விமானங்களுடன் ஹோண்டாஜெட் விமானத்தை ஒப்பிடும்போது, 20 சதவீதம் கூடுதல் இடவசதியை பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
எஞ்சின் இந்த விமானத்தின் எஞ்சின் இறக்கையின் மேல்புறத்தில் உள்ள தாங்கி மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இறக்கையின் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சிறந்த இடவசதி கொண்டதாக உருவாக்கியுள்ளனர். ஹோண்டாஜெட்டில் ஜிடி ஹோண்டா எச்எஃப்120 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா வடிவமைத்துள்ளது. இந்த எஞ்சின் விமானம் மேலே எழும்பும்போது 2050 lb-ft த்ரஸ்ட்டை அளிக்கும்.
அதிர்வுகள் குறைவு இறக்கையின் மேலே உள்ள தாங்கியில் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால், அதிர்வுகளும், கேபினுக்குள் சப்தமும் மிக குறைவாக இருக்கும். இதனால், சொகுசான, இனிமையான பயண அனுபவத்தை வழங்குமாம். இதுவும் கோடீஸ்வரர்களை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
ஏவியோனிக்ஸ் சிஸ்டம் அடுத்த தலைமுறை கார்மின் ஜி3000 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் மூலம் விமானிகளுக்கான கட்டுப்படுத்தும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், டியூவல் டச் ஸ்கிரீன் கன்ட்ரோலர்கள் மற்றும் அதிதுல்லியமாக தகவல்களை காண்பிக்கும் 3 திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஒரு விமானி மூலம் அல்லது இரு விமானிகள் மூலமாகவும் இயக்க முடியும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.