aa

aa

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர் புரட்சியாளரும் மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சிறுமி மலாலா யூசுஃப்சாயின் பெயரை சூரிய மண்டலத்தைச் சுற்றி வரும் ஓர் குறுங்கோளுக்கு சூட்டி பெருமை சேர்த்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
நமது சூரிய குடும்பத்தில் ஆயிரக் கணக்கான குறுங்கோள்கள் செவ்வாய்க் கிரகத்துக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள கியூப்பெர் பெல்ட்டில் சூரியனை சுற்றி வருகின்றன.

இவற்றில் ஒன்று 2010 ஜூன் மாதம் கண்டுபிடிக்கப் பட்டு அதற்கு குறுங்கோள் 316201 எனப் பெயரும் இடப் பட்டிருந்தது. இந்நிலையில் மலாலாவின் சொந்த வரலாற்றைக் கேள்விப் பட்டு அதனால் ஈர்க்கப் பட்ட அமி மைன்ஷெர் என்ற விஞ்ஞானி இந்த குறுங்கோள் 316201 இற்கு மலாலாவின் பெயரை சூட்டி அண்மையில் பெருமை சேர்த்துள்ளார். அதாவது இனிமேல் குறித்த குறுங்கோள் '316201 மலாலா' என்றோ அல்லது '2010 ML48' என்றோ தான் அழைக்கப் படும். '316201 மலாலா' குறுங்கோளானது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே ஒவ்வொர் 51/2 வருடத்துக்கும் ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகின்றது. சுமார் 4 Km விட்டமே உடைய இந்த விண்கல்லின் மேற்பரப்பானது பிரிண்டரின் டோனர் போன்று மிகக் கருமையாக உள்ளது.

இந்நிலையில் '316201 மலாலா' என்ற பெயரைச் சூட்டிய அமி மைன்ஷெர் கூறுகையில், பெண் சிறுமிகளின் கல்வி உரிமைக்காகப் போராடிவரும் மலாலாவின் தன்னம்பிக்கையால் தான் ஈர்க்கப் பட்டே இம்முடிவை எடுத்ததாகவும் வருங்காலத்தில் மனித இனத்தின் மிகக் கடினமான சிக்கல்களைத் தீர்ப்பதில் ஆண் பெண் என அனைத்துத் தரப்பினரதும் மூளை சக்தியும் எமக்குத் தேவைப் படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top